வெள்ளி, 18 ஜனவரி, 2013

யார்......... சித்தம்? 

 ஒரு முறை ஒரு நிருபர் அன்னை திரேசாவைப் பார்த்துக்கேட்டார்,  "உங்களால் மட்டும் எப்படி  இந்தப் பணியை சலிப்பு இன்றி செய்ய முடிகின்றது ? என்று. அதற்குஅவர் சொன்னாராம் "நான் ஒவ்வொரு முறையும்  ஒரு நோயாளியைத் தொடும் பொழுதும் இயேசுவையே தொடுவதாக உணர்கின்றேன்" என்று கூறுவாராம். உண்மையில் இது ஒரு அதிசயிக்கத்தக்க பதில். ஆனால் ஆழமான விசுவாசம் நிறைந்த பதிலும் கூட. எங்களால் சிலவேளைகளில் பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத போது நாங்கள் தரித்து நின்று திகைப்பதைக் காண்கிறோம். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகின்றோம். இதற்குள் உண்மையான ஒரு நிலை காணப்படுகின்றது. அதாவது நாங்கள் கடவுளை விசுவசிப்பது கிடையாது. அவர் எம்மை வழிநடத்துவார் என்று நம்புவது கிடையாது.  நாங்கள் விரும்புகின்ற விதத்தில் விடயங்கள் செய்யப்படவில்லை என்றால் அதில் உண்மையாக நாங்கள் கடவுளின் சித்தம் ஒன்று உண்டு என்பதை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். 

 பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே என்ற செபம் சொல்லும்பொழுது நாங்கள் அதில் கடவுளின் சித்தம் ஒன்றையே தேடுகின்றோம். ஆனால் காலப்போக்கில் எமது முடிவையே அங்கு திணிக்க விரும்புகின்றோம். இது ஒரு முரண்பாட்டு மனநிலையை காட்டுகின்றது. கடவுளின் சித்தத்திற்கு எம்மை முழுமையாக கொடுத்த பின்னர் அதில் நாங்கள் எமது விருப்பத்தின்படி  எல்லாமே நடக்க வேண்டும் என  எதிர்பார்க்காது. கடவுளின் விருப்பம் எமது வாழ்வில் நடக்க எம்மை நாம் இழந்து விட்டுகொடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக